நண்பரிடம் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பீட்டர் அந்தோணி பிரபு (36). பெங்களூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இந்நிலையில், பீட்டர் அந்தோணி பிரபு தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்து மாரியப்பன் (35) என்பவருடன் கோவில்பட்டியில் உள்ள பாரில் மது குடித்துள்ளார். அப்போது, போதையில் இருந்த பீட்டர் அந்தோணி பிரபுவின் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் லேப்டாப்பை முத்து மாரியப்பன் திருடி சென்றுள்ளார்.இது குறித்து பீட்டர் அந்தோணி பிரபு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து முத்து மாரியப்பனை கைது செய்து அவரிடமிருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
What's Your Reaction?