கிருஷ்ணகிரி அருகே குழந்தையை கடத்திச் சென்ற இளம்பெண் கைது; நடந்தது என்ன..?

Aug 31, 2025 - 11:22
Aug 31, 2025 - 11:23
 0  15
கிருஷ்ணகிரி அருகே குழந்தையை கடத்திச் சென்ற இளம்பெண் கைது; நடந்தது என்ன..?

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது24). இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயது மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளனர். நாகேஷ், ஈஸ்வரி இருவரும் பெங்களூரூ நெலமங்களாவில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈஸ்வரி, தன்னுடைய கணவர் நாகேசுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவர் கிருஷ்ணகிரி வந்தார். தன் உறவினர்களுடன் ராயக்கோட்டை மேம்பாலம் அடியில் கூடாரம் அமைத்து, குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் மாலை அங்கு வந்த ஒரு பெண், தன் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், கைக்குழந்தைக்கு புதிய ஆடை, விளையாட்டு பொருட்கள் வாங்கி தந்தால் தோஷம் விலகும் எனக்கூறி குழந்தையுடன், ஈஸ்வரியை ஆட்டோவில் அழைத்து சென்று ஆடை,விளையாட்டு பொருட்களை வாங்கிதந்துள் ளார்.பின்னர் ஈஸ்வரியை ராயக்கோட்டை மேம்பாலம் அரு கில் விட்டுவிட்டு குழந்தையை அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு தூக்கி சென்று வழிபட்டு வருவதாக கூறிசென்றவர் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அப்போது குழந்தையை கடத்தி சென்றவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஆண்டியூரை சேர்ந்த விஜயசாந்தி (26) என்பது தெரியவந்தது.விஜயசாந்திக்கு ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் திருமணமாகி பிரிந்துவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பாளையத்தை சேர்ந்த திம்மராஜ் என்பவருடன் திருமணமாகி அவர்களுக்கு 7 மாதத்திற்கு முன் குழந்தை இறந்த பிறந்ததாகவும் இதை கணவரிடம் தெரிவிக்காத விஜயசாந்தி,குழந்தை இருப்பதாகவே கணவரிடம் கூறி ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் குழந்தையை தற்போது பார்க்க கூடாது என கூறிவந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை மேம்பாலம் அடி யில் ஆதரவற்ற பலர் குழந்தைகளுடன் தங்கியிருப்பதை அறிந்த விஜயசாந்தி குழந்தையை கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.இந்த நிலையில் விஜயசாந்தி குழந்தைக்கு துணி வாங்கிய கடையில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பிய மொபைல் எண்ணை வைத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விஜயசாந்தியை அவர் தங்கியிருந்த ஓசூர் லாட்ஜில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்தனர்.கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு ஈஸ்வரியிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஒப்படைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow