பூட்டி இருந்த வீட்டில் எட்டரை பவுன் நகை திருட்டு

Mar 23, 2025 - 12:30
 0  3
பூட்டி இருந்த வீட்டில் எட்டரை பவுன் நகை திருட்டு

தருமபுரி பிடமனேரி கோவிந்தவர்மா தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (64). இவரது கணவர் இறப்பிற்கு பிறகு தனியாக வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,ஓசூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்ற நாகலட்சுமி நேற்று முன்தினம் மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி உள்ளே சென்று பார்த்தபோது,பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.இது குறித்து நாகலட்சுமி அளித்த புகாரின்பேரில் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow