புதுப்பேட்டையில் ரூ.8400 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை மணம்தவிழ்ந்தபுத்தூர் அருகே மெயின் ரோட்டில் அமைந்துள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.அசோகன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் போலீசார் மணம்தவிழ்ந்தபுத்தூர் மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அதில் ரூ.8400 மதிப்புள்ள 21 கிலோ கிராம் எடை கொண்ட, 1050 ஹான்ஸ் பாக்கெட்களை வைத்திருந்த கடை உரிமையாளர் புஷ்பராஜ் 28, த/பெ ஆறுமுகம், அங்காளம்மன் கோவில்தெரு, ஒறையூர், 2. அதியமான் (எ) பிரபாகரன் வயது 36, த/பெ கலியபெருமாள், கொய்யாதோப்பு, ஒறையூர், ஆகியோர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விற்பனையாளர்களை பிடித்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுப்பேட்டை காவல் நிலையம் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.மேலும் புதுப்பேட்டை போலீசார்களின் பணியை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டுகளை தெரிவித்தார்.
What's Your Reaction?






