காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த முகமது அப்பாஸ் அம்பேத்கர் நகர் மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






