பொதுமக்கள் - போலீஸ் நட்புறவு கிரிக்கெட் போட்டி

தர்மபுரி மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் மற்றும் போலீஸ் இடையே நட்புறவு ஏற்படுத்தும் வகையில் வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.இதை ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன் துவக்கி வைத்தார்.போட்டியில் எஸ்.ஐ., பாரூக் தலைமையிலான போலீஸ் அணியினர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசு மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டினார். அப்போது, ஆயுதப்படை டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி உடனிருந்தார்.
What's Your Reaction?






