பேருந்துகளின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நான்கு நபர்கள் கைது
வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கனாப்பேரி மற்றும் அருளாட்சி ஆகியப் பகுதிகளில் கடந்த 20.05.24 அன்று இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இரு வேறு அரசு பேருந்துகள் மீது இருசக்கர வாகனத்தில் தங்களது முகங்களை மூடிக் கொண்டு வந்த நபர்கள் கல்லால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தும், பேருந்து ஓட்டுனருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. பேருந்துகளின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பற்றி விசாரணை மேற்கொண்டதில் வாசுதேவநல்லூர் கிணற்றடி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கார்த்திக் ராஜா, புது காலனி 2வது தெருவை சேர்ந்த பாலாண்டவர் என்பவரின் மகன் தமிழ் ஈஸ்வரன், பெருமாள் என்பவரின் மகன் கருப்பசாமி மற்றும் ராஜா கிருஷ்ணன் என்பவரின் மகன் கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் நான்கு நபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி இன்று 28.05.2024 -ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்..
What's Your Reaction?