தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு.R.சதீஷ்,IAS., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com,BL., ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
"தலைக்கவசம் விழிப்புணர்வு" குறித்த இந்த பேரணியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இருந்து வள்ளலார் திடல் வரை நடைபெற்றது.மேலும் இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசம் , "சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு" குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினர்.இந்நிகழ்வில் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.ஜெயதேவராஜ், உதவி ஆணையர் (கலால்) திருமதி.நர்மதா போக்குவரத்து ஆய்வாளர் திரு.தரணீதரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






