70 டன் ரேஷன் அரிசி கடத்தல்;3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சேலம் டிஎஸ்பி வடிவேல் தலைமையில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்ஐ-க்கள் பெருமாள், வள்ளியம்மாள், கதிரவன், போலீஸார் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் பல குழுக்களாக பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது, ஜக்கேரி பேருந்து நிறுத்தம் அருகில் ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 468 மூட்டைகளில், 23 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்காக கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த ஸ்ரீதரன்(27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கூறிய தகவல்படி ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே சென்ற மற்றொரு லாரியை பிடித்து சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 19 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த மணி(33) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
What's Your Reaction?






