கல்லூரியின் பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Mar 23, 2025 - 10:28
 0  9
கல்லூரியின் பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம் அழுகிய நிலையில் ஆண் உடல் இருப்பதாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின் பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow