ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பாப்பாக்கம் செல்வி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 55 திருக்கழுகுன்றம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார் . இந்த நிலையில் நேற்று தன்னுடன் பணியாற்றும் நான்கு பணியாளர்களுடன் காரில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளனர் . ஒகேனக்கலில் மெயின் அருவி , தொங்கு பாலம் , முதலைப் பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர் . பின்னர் முருகேசன் தன்னுடன் பணியாற்றும் பணியாளர்களுடன் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் . அப்போது காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது முருகேசன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார் . நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உள்ளார் . உடன் வந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் ஒகேனக்கல் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை சடலமாக மீட்டனர் . பின்னர் மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






