அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது;காதலன்னு போலீஸ் வலை

Dec 4, 2024 - 03:32
 0  4
அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது;காதலன்னு போலீஸ் வலை

கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 21ம் தேதி பெண் ஒருவர் அளித்த புகாரில், தனது 14 வயது மகளை, வாலிபர் ஒருவர் காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். தற்போது, தனது மகள் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். போலீசார் விசாரணையில், சாலிகிராமம் பகுதியை சேர்ந்த தருண் (19) என்பவர், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, தருண் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. தலைமறைவாக உள்ள தருணை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow