பாதுகாப்பு படையினர் அதிரடி; நக்சலைட் தீவிரவாதிகள் 5 பேர் கொலை

May 11, 2024 - 06:30
 0  15
பாதுகாப்பு படையினர் அதிரடி; நக்சலைட் தீவிரவாதிகள் 5 பேர் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் பிடியா கிராமத்தில் கங்களூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.இதனிடையே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில காலமாகவே பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow