முன்னாள் கணவர் மீது இளம்பெண் புகார்

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 31 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றுமுன்தினம் கொடுத்துள்ள புகாரில், எனக்கு திருமணம் நடந்ததில் இருந்து கணவருக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.இதனால், விவாகரத்து செய்துவிட்டேன். தற்போது தனியாக வசித்துவரும் எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த முன்னாள் கணவர், ரூ.40 லட்சம் கொடுக்காவிட்டால், திருமணத்தை நிறுத்தி விடுவேன், என மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதன் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






