கடை முன் மது அருந்த தடை; ஆத்திரத்தில் வெடிகுண்டு வீசிய கொடூரம்
சென்னை தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அதிமுக 12வது வார்டு உறுப்பினராக உள்ளார்.இவர் நெடுங்குன்றம் பகுதியில் ஏப்ரல் 28 அன்று தனது வீட்டின் அருகே நடத்தி வரும் உணவகத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் உணவு தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீசியதாக கூறப்படுகிறது. அப்போது வீசிய வெடிகுண்டுகள் பலத்த தீப்பொறியுடன் இரும்பு கதவு மீது வெடித்ததால் முத்துப்பாண்டி குடும்பத்தினர் அலறி அடித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.தகவலின் பேரில் தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (22) என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் கடந்த ஓராண்டாக தன்னையும், கூட்டாளிகளையும் முத்துப்பாண்டியின் மகன் அழகுபாண்டி கடையின் அருகே மது அருந்தக் கூடாது என கூறி தொல்லை செய்ததால் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசியதாகவும் அன்பழகன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரது கூட்டாளியான ஜீவா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அன்பழகன் வீட்டில் 17 நாட்டு வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?