இளைஞருடன் உல்லாசம்.. கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட சிறுமி பலி

Oct 12, 2024 - 08:03
 0  10
இளைஞருடன் உல்லாசம்.. கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட சிறுமி பலி

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். 23 வயதான இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிப்பட்ட முறையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ள நிலையில், மாணவி கர்ப்பமடைந்து உள்ளார். இதையடுத்து உறவினர்கள் யாருக்கும் தங்களது அந்தரங்க உறவு தெரியக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர்.மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்தால் வீட்டில் தெரிந்து விடும் என பயந்து, கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிட்டு கருவை கலைக்க முயற்சித்துள்ளார் அந்த சிறுமி. மாத்திரை சாப்பிட்ட பின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து சிறுமியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதற்கு சிறுமியின் உறவினர் அரவிந்த் தான் காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து எலச்சிபாளையம் காவல் துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow