ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த முத்தப்பா மற்றும் அவரது உறவினர் பெங்களூர் சர்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த சென்னப்பன் ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ஆலம்பாடி காவிரி ஆற்றுப் பகுதியில் குடும்பத்துடன் குளித்தனர். அப்போது முத்தப்பா மகள் பாக்கியலட்சுமி வயது (10), சென்னப்பா மகள் காவியா வயது (16) ஆகிய இருவரும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆழமான பகுதிக்கு சென்றதை அடுத்து நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்ட உறவினர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.ஆனால் காப்பாற்ற முடியவில்லை. அதனை அடுத்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் மீட்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமிகளை தேடினர்.இதில் அரை மணி நேரம் தேடுதலுக்கு பின்பு காவியாவை சடலமாக மீட்டனர். அதன் பின்பு மேலும் ஆழமான பகுதியில் தேடிய பொழுது பாக்கியலட்சுமியையும் சடலமாக மீட்டனர். இதனைக் இதனைக் கண்டு உறவினர்கள் கதறி துடித்த நிலையில் ஒகேனக்கல் காவல்துறையினர் மீட்கப்பட்ட இரு மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






