க்யூ ஆர் கோட்டை வைத்து பெற்றோருடன் குழந்தையை சேர்த்த போலீசார்

Apr 15, 2024 - 15:38
May 14, 2024 - 02:12
 0  32
க்யூ ஆர் கோட்டை வைத்து பெற்றோருடன் குழந்தையை சேர்த்த போலீசார்
க்யூ ஆர் கோட்டை வைத்து பெற்றோருடன் குழந்தையை சேர்த்த போலீசார்

விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமான முறையில் பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. காணாமல் போன மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் க்யூ ஆர் கோடு உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.மும்பை வோர்லியில் 12 வயது மாற்றுத்திறனாளி குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காமல் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் பெற்றோரின் தொலைபேசி எண்கள் குழந்தை கழுத்தில் இருந்த QR குறியீட்டின் மூலம் ஸ்கேன் செய்த பிறகு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து உங்கள் குழந்தை எங்களுடன் உள்ளது என போலீஸ் தெரிவித்துள்ளனர்.அந்த எண்ணுக்கு போன் செய்த போலீசார் விவரம் பெற்று குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். க்யூஆர் கோட் மூலம் குழந்தையை குடும்பத்துடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow