காவல் நிலையத்தில் குறிப்பிட்ட நேரங்களில் வெடிக்கும்; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் கைது

May 2, 2024 - 05:43
 0  16
காவல் நிலையத்தில் குறிப்பிட்ட நேரங்களில் வெடிக்கும்; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் கைது

மதுரையில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அடுத்தடுத்து இரு கடிதங்கள் வந்ததை தொடர்ந்து அந்த கடிதத்தில், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.இந்த கடிதம் தொடர்பாக ஆய்வு செய்ததில், மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்த விஏஓ ஒருவரின் பெயர், முகவரி, செல்போன் எண் இருந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை அனுப்பியவர் மதுரை, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த குமரேசன்(60) என்பதும், இவர் தனக்கு பிடிக்காதவர்களின் பெயரில் மதுரை, மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து, குமரேசனை போலீசார் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow