பட்டப்பகலில் பட்டா கத்திகளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று ரவுடிகள் கைது

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி போலீசார் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காசிநாதபுரம் கூட்டு சாலையில் பட்டப்பகலில் ரவுடிகள் மூவர் கைகளில் பட்டா கத்திகள் வைத்துக் கொண்டு அவ்வழியாக சென்று வந்த பொதுமக்களை பார்த்து அபாச வார்த்தைகளால் பேசியும், கத்தியை கட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.பின்னர், திருத்தணி காவல் ஆய்வாளர் மதியரசன் வழக்கு பதிவு செய்து, மூன்று பட்டா கத்திகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலஞ்சேரி காலனியை சேர்ந்த ராஜ்குமார்(23), வள்ளியம்மாபுரம் சேர்ந்த நவீன்(23), இந்திராநகர் சேர்ந்த சந்தோஷ்(21) என்பது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






