இன்றுடன் ஓய்வு பெற இருந்த காவல் ஆய்வாளர் நேற்று உயிரிழந்த சோகம்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒட்டமெத்தை கருமண் செட்டித்தோட்டத்தை சேர்ந்தவர் தனபால் (60). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், சூர்யகுமார் என்ற மகனும் உள்ளனர்.ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளராக தனபால் பணியாற்றி வந்த இவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று மாலை 6 மணியளவில் தனபால் டீ குடித்தபோது திடீரென மயங்கி விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தனபாலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரடைப்பால் மரணமடைந்த இன்ஸ்பெக்டர் தனபால் இன்றுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?