மாணவர்களை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்து வந்த 3 பேர் கைது

சென்னை:நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக கடந்த 17-ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் சோதனை நடத்தினர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த காத்திக்ராஜா (வயது 27), நாகப்பட்டிணம் மாவட்டம் தெத்திசமர்சன் நகரை சேர்ந்த முகமது ஜெகர் சாதிக் (வயது 24), செஞ்சி அனந்தபுரம் கீழ்மலை பகுதியை சேர்ந்த ராம்சந்தர் (வயது 34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த 6 கிராம் மெத்தம்பெட்டமின், ரூ.12,500 ரொக்கம், 26 போதை ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






