பக்தி மயத்தில் சீருடையில் நேரத்திக்கடன் செலுத்திய பெண் காவலர்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில், பெண் போலீசார் ஒருவர் சீருடையுடன் பூக்குழிக்குள் இறங்கி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த மே மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்நிலையில், அம்மனுக்கு காப்புக் கட்டும் நிகழ்வுக்குப் பின்னர், நேற்று மாலை பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.இந்த விழாவில், பழநியில் இருந்து மட்டுமல்லாமல் பிற பகுதிகளில் இருந்தும் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 2,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இந்நிலையில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பழநி சரகத்தைச் சேர்ந்த 7 பெண் போலீசாரும் பக்தி மிகுதியில் சீருடையுடன் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். பெண் போலீசார் ஆர்வமுடன் பூக்குழி இறங்குவதைக் கண்ட பக்தர்கள் குலவையிட்டு வரவேற்பு செய்தனர். இதனை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
What's Your Reaction?






