மத்திய அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் தீ விபத்து
டெல்லி: நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். டெல்லி தீயணைப்பு சேவை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "இன்று காலை 9.20 மணியளவில் உள்துறை அமைச்சகத்தின் ஐசி பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 9.35 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், ஜெராக்ஸ் இயந்திரம், சில கணினிகள் மற்றும் சில ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு இல்லை.ஆனால் அப்போது பல்வேறு அரசு அதிகாரிகள் அங்கு இருந்தனர்,'' என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?