உத்திர பிரதேசம் லக்னோவில் 67. அகில இந்திய காவல் பணித்திறன் போட்டி; தமிழக காவல்துறையினர் சாதனை

Apr 11, 2024 - 18:37
 0  135
உத்திர பிரதேசம் லக்னோவில் 67. அகில இந்திய காவல் பணித்திறன் போட்டி; தமிழக காவல்துறையினர் சாதனை

இப்போட்டிகளில் தமிழ்நாடு உட்பட 21 மாநில காவல்துறை அணிகளும், 7 மத்திய சிறப்புப் படை பிரிவு அணிகளும் கலந்துகொண்டன. தமிழக காவல்துறை குழுவிற்கு தமிழ் நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. M. அண்ணாதுரை கூடுதல் துணை ஆணையர். சென்னை மாநகர காவல்துறை மற்றும் M. பாபு துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம் அவர்களின் தலைமையில் சென்ற தமிழக காவல்துறைக் குழு. போட்டியில் பங்கேற்று 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்தது. மேலும் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டியில் பங்கேற்று முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கான வெற்றிக் கோப்பைகளையும் தமிழ்நாடு காவல் துறை குழு வென்றது. வெற்றி பெற்ற குழுவினர், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களை (05.04.2024) இன்று சந்தித்து அவரது பாராட்டுகளையும் வாழத்துகளையும் பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow