பாமக நிர்வாகி மீது சரமாரி வெட்டு;மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்

Jul 6, 2024 - 21:33
 0  19
பாமக நிர்வாகி மீது சரமாரி வெட்டு;மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்

கடலூர் திருப்பதிரிபுலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவரது மகன் சங்கர் என்கிற சிவசங்கர் (43). கேபிள் டிவி பிசினஸ் செய்து வரும் இவர் பாமக நிர்வாகியாக உள்ளார். கடலூர் நகர வன்னியர் சங்க முன்னாள் தலைவர். இவர் இன்று (ஜூலை 6) மதியம் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் அவரை வெட்டினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வண்டிப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலைச் சம்பவம் நடந்த நிலையில், தற்போது பாமக பிரமுகர் மர்ம ஆசாமிகளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அரசு மருத்துவமனையில் சங்கரின் ஆதரவாளர்கள் திரண்டு வருவதால், கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையொட்டி, அரசு மருத்துவமனை சூரப்பநாயக்கன் சாவடி பகுதியிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சங்கரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow