இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் வாகன திருட்டு வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதின் பேரில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா,உதவி ஆய்வாளர் திரு.சந்துரு மற்றும் போலீசார் அனைத்து சம்பவ இடங்களையும் பார்வையிட்டு CCTV காட்சி பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 28, த/பெ அய்யாசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மோட்டார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?






