பல்லடம் கொலை வழக்கு; சிபிசிஐடி விசாரணை

Mar 22, 2025 - 06:12
 0  6
பல்லடம் கொலை வழக்கு; சிபிசிஐடி விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் ஒன்றியம் சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமார் (46) ஆகிய 3 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில்.100 நாட்கள் கடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கோவை மண்டல சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி தலைமையில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது கொலை செய்யப்பட்ட கோவையில் ஐடி ஊழியராக பணிபுரிந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா (34), அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கொலை நடந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow