கத்தியுடன் உலா வந்த இளைஞர்களால் பரபரப்பு;எம்.எல்.ஏ ஆதரவாளரை பதம் பார்த்த சோகம்
கடலூர் அருகே திருவந்திபுரம் சாலகரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்த ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மண்டபத்தின் உள்ளே கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் புகுந்த 2 இளைஞர்கள், கஞ்சா போதையில் அங்கு பாடலுக்கு கத்தியோடு நடனம் ஆடி எல்லோரையும் மிரட்டியதோடு இருக்கைகளை சேதப்படுத்தி உள்ளனர்.பின்னர் அந்த இளைஞர்கள் திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக பைக்கில் கத்தியை வீசியபடியே பொதுமக்களை மிரட்டும் வகையில் சென்றபோது அந்த வழியாக சென்ற கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளரான சன்பிரைட் பிரகாஷ் முகத்தில் கத்தி வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் வாலிபர்கள் கத்தியை வீசியபடி பைக்கில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?