30 பவுன் நகை கொள்ளை; மூன்று பேர் கைது
உத்தமபாளையம் அருகே வீடு புகுந்து 30 பவுன் நகையை கொள்ளையடித்த 3 பேரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் (56).மருந்துக்கடை வைத்துள்ளார். மனைவி லட்சுமியுடன் ராயப்பன்பட்டிக்கு செல்லும் தோட்ட சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள மகனின் வீட்டிற்கு இருவரும் சென்றுவிட்டு கடந்த 6ம் தேதி ஊர் திரும்பினர்.
அப்போது, வீட்டின் கேட் உடைக்கப்பட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் உள்ளே பீரோக்களை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராஜன் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.விசாரணையில், ராஜனின் தற்காலிக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த தேனி மாவட்டம், போடியை சேர்ந்த விஜயகுமார் (26), தஞ்சாவூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (33), திருச்சியை சேர்ந்த ஜெயக்குமார் (33) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த ராயப்பன்பட்டி போலீசார், அவர்களிடமிருந்து கார், நகை, பணம் பறிமுதல் செய்தனர். பின்னர் கார், பணம் ராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
What's Your Reaction?