கணக்கெடுப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்
பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டம் அமைய உள்ள இடத்தில், வீடுகளை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நெல்வாய் கிராமத்தில் உள்ள மக்கள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட முயன்றனர். அப்போது, கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?