விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 11.300 கிராம் கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் தலைமையில் போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க பல்வேறு போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனை சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பிரிவு அருகில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சந்திப்குமார் பெஹ்ரா(22). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் பேரூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சென்று சோதனை மேற் கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான் மொல்லா(26). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் இவ்வாறாக கோவை மாவட்டத்தில் நேற்று 11 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
What's Your Reaction?






