முன் விரோதம் காரணமாக தம்பதியினர் தாக்குதல்

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்.இவரது மனைவி பாரதி (32). இவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் லதா (45) மற்றும் அவரது மகன் திவாகர் (24) ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக முன்விரோதம் காரணமாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி மாலை பாரதி மற்றும் அவரது கணவர் இருவரும் பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது திவாகர் மற்றும் அவரது தாய் லதா ஆகியோர் தம்பதியை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பாரதி திருவள்ளூர் தாலுகா போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






