500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல்; இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் பிருந்தா தலைமையிலான வனத் துறையினர் சாயர்புரம் பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, காமராஜர் நகர் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அங்கு ஓரிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?






