லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

சென்னை வேளச்சேரியில் கட்டிய புதிய வீட்டுக்கு இரு மின் இணைப்பு கோரி, கட்டிட காண்ட்ராக்டர் முருகன், வேளச்சேரி மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் விண்ணப்பத்தை பரிசீலித்து மின் இணைப்பு வழங்க மின் பொறியாளர் வெங்கடேசன், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.10 ஆயிரம் பெரும் தொகையாக உள்ளது சற்று குறைத்துக் கேளுங்கள் என முருகன் கூறியதை அடுத்து இறுதியாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி கூறிய வெங்கடேசன், முன்பணமாக 2 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.இதுகுறித்து முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்ய, போலீசார் அறிவுறுத்தலின் பேரில், லஞ்சப் பணத்தை கொடுத்த போது, வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
What's Your Reaction?






