போக்சோ குற்றவாளிக்கு 20 வருடங்கள் சிறை மற்றும் ரூபாய் 20,000-/ ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பெருசாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(29) த/பெ கோவிந்தசாமி. லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேற்கண்ட நபர் கடந்த 09.01.2023 அன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 14-வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பெருசாகவுண்டம்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் 1098 குழந்தைகள் உதவி மையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் 06.04.2023 அன்று அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணை முடித்து, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 26.03.2025-ஆம் தேதி தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் மேற்படி குற்றவாளி சுரேஷ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20000/- அபராதமும், விதித்து நீதிபதி.திரு.P.சிவஞானம்.,MA,ML,.அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது.
What's Your Reaction?






