பாம்புடன் வந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு

தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் கடைக்கு புதன்கிழமை செட்டிக்கரை கிராமத்தைச் சோ்ந்த சூா்யா (எ) சண்முக சுந்தரம் (27) என்பவா் உயிரிழந்த சாரைப் பாம்பை தன்னுடைய கழுத்தில் சுற்றிக்கொண்டு மதுக்கடை ஊழியா்கள் மற்றும் அவ்வழியே வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டாா். அதேபோல போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் நிலையத்தில் அவா் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
What's Your Reaction?






