தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விபத்து விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்ன பள்ளத்தூர் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பாக. தொண்டு வாரம் கொண்டாடப்பட்டது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர் . 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மும்பை துறைமுகத்தில் வெடி பொருட்கள் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அழிந்து போயின. மக்கள் பலர் உயிரிழந்தனர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையை சார்ந்த 66 பேர் மரணம் அடைந்தனர் இந்த நிலையில் தீயணைக்கும் போது உயிர் துறந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் நாள் இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தீயணைப்பு தொண்டு வாரம் கொண்டாடப்படுகிறது.இவ்வாண்டும் ஏப்ரல் 14 ஆம் முதல் 20 ஆம் வரை தீ தொண்டு நாள் வாரம் கொண்டாடப்படுகிறது இந்தத் தொண்டு நாளில் தீ விபத்துகளின் அழிவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல தீ விபத்தால் ஏற்படும் பொருளாதார அழிவினை தடுக்கும் விழிப்புணர்வுகளை ஏற் ஏற்படுத்தினர்
What's Your Reaction?






