அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் சோதனை மற்றும் ரோந்து பணி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் அரக்கோணம் ரயில்வே நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையிலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
மேலும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் குற்றவாளிகளின் நடமாடத்தை கண்காணிக்கவும் சந்தேகத்திற்குகிடமானவர்களை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
What's Your Reaction?






