ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளுக்கு நடத்தப்பட்ட அவசர ஆலோசனை கூட்டம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியானது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.அவ்வாறு சுற்றுலா வரும் பயணிகள் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி பகுதிகளில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறாக தங்கும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி, ஆயில் மசாஜ் போன்றவைகளில் ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி அபாயகரமான பகுதிகள் மற்றும் ஆழமான பகுதிகளில் சென்று பல்வேறு சிக்கல்கள் மற்றும் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.அவ்வாறாக நடந்தேறி வரும் சிக்கல்களை தவிர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்களை அழைத்து விடுதி உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.
அதில் காவல் ஆய்வாளர் கூறியதாவது: விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்கும் விடுதியில் தங்க வரும் சுற்றுலா பயணிகளிடம் ஆதார் நகலை பெற வேண்டியது அவசியம்,ஒகேனக்கல்லை சுற்றியுள்ள அனைத்து அபாயகரமான பகுதிகள்,தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் மது போதைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் சுற்றுலா பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இவ்வாறான விதிமுறைகளை பின்பற்றாத விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரைப்பது மட்டுமின்றி விடுதி உரிமையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தினார்.மேலும் அனைத்து விதிமுறைகளும் வரிசைப்படுத்தப்பட்ட துண்டு பிரசுரங்களை தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு காவல் ஆய்வாளர் முரளி வழங்கினார்.
What's Your Reaction?






