ஆடு திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் காணாமல் போவதாக கறம்பக்குடி காவல் நிலையத்தில் அதிகமான புகார்கள் வந்த நிலையில் ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்நிலையில் கறம்பக்குடி இலைகடிவிடுதி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலைகடிவிடுதி வடக்கு பட்டி பகுதியை சேர்ந்த தனபால் (32) கரும்புளிக்காடு பிரேம்குமார் (22) அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (22) ஆகிய மூவரும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் இலைகடிவிடுதி, மயிலாடி தெரு,கரும்புளிகாடு பகுதிகளில் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 ஆடுகளை கறம்பக்குடி போலீசார் கைப்பற்றி ஆடு திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?