தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய சமத்துவ பொங்கல் விழா

Jan 15, 2025 - 09:12
 0  4
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய சமத்துவ பொங்கல் விழா

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களின் தலைமை யில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச் சிக்கு டி.எஸ்.பி. மனோகரன், முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் போலீசார் காவல் நிலையத்தை வண்ண தோரணங்களாலும், கலர் கலர் பலூன்கள் கட்டி அழகுபடுத்தியும், புதுப் பானையில் பொங்கல் வைத்து செங்கரும்புடன் பொங்கல் சமைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். அதனை தொடர்ந்து காவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி யில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி.எஸ்.பி மனோகரன் அவர்கள் பரிசு களை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நிலைய எழுத்தர் ரவி, எஸ்.ஐ.கோகுல் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow