இலங்கைக்கு கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 5.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

Jul 27, 2024 - 18:26
 0  6
இலங்கைக்கு கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 5.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள மானங்குடி கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 5.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை மத்திய சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெற இருப்பதாக மத்திய சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருச்சியைச் சோ்ந்த சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் நவீன தொழில் நுட்பத்துடன் ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது உச்சிப்புளி அருகே உள்ள மானங்குடி கடற்கரையில் வாகனத்தில் கொண்டு வரப்பட்டிருந்த 5.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் இந்தக் கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow