அதிமுக நிர்வாகி எரித்துக் கொலை
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே எம்.வீரட்டிக்குப்பம் முதனை சாலையில், நேற்று காலை சென்றவர்கள், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஊமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.உடனடியாக போலீசார் சென்று சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அங்கு சென்று விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில், எரிந்து கிடந்தவர் வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கதிர்காமன் (43) என்பதும், அக்கிராம அதிமுக கிளை பொருளாளர் என்றும் தெரிந்தது.
What's Your Reaction?