ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்;2 பேர் கைது

Dec 1, 2024 - 16:14
 0  2
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்;2 பேர் கைது

கேரள மாநிலம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிபு ஆண்டனி (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நெல்லை, ராதாபுரத்தில் 60 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. அந்த நிலத்தை விற்க பலரிடம் பேசிய அவர் ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளரான கூத்தங்குழியைச் சேர்ந்த டான் பாஸ்கோ (52) என்பரிடமும் பேசியுள்ளார்.விலையில் இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் முடவன்குளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் புரோக்கருமான சுப்பிரமணி (38), கூத்தங்குழியைச் சேர்ந்த சரோ ஆகியோருடன் சேர்ந்து டான் பாஸ்கோ மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். திசையன்விளையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கு மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டான் பாஸ்கோ உட்பட 3 பேர் சேர்ந்து சிபு ஆண்டனியை கடத்திச் சென்று, ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் அடைத்து வைத்து 30 சென்ட் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் டான்பாஸ்கோ, சுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரோ என்பவரை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow