சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

May 1, 2024 - 02:43
 0  10
சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிழக்கு மண்டல இணை ஆணையரின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் நேற்று முன்தினம் இரவு அயனாவரம் கே.கே.நகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை அயனாவரம் போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அந்த லாரியில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டுநர் ஆவடி பாரதி நகரை சேர்ந்த சதீஷை (37) கைது செய்தனர்.விசாரணையில் அவர் பூந்தமல்லியை சேர்ந்த சவுந்தரராஜனிடம் லாரி டிரைவராக வேலை செய்து வருவதும், இவர் தனது உறவினரான சூர்யா என்பவரிடம் ஆந்திராவிற்கு லாரியில் லோடு ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும்போது ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து சதீஷை சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சூர்யா, ஆல்பர்ட், ராமு ஆகியோரை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow