இலங்கைக்கு கடத்த இருந்த 20 லட்ச ரூபாய் பீடி இலைகள் பறிமுதல்;கியூ பிரிவு போலீசார் அதிரடி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் கியூ பிரிவு போலீஸார் அங்கு சென்றபோது கலைஞானபுரம் கடலுக்குச் செல்லும் வழியில் டிஎன்69 பிகியூ 9901 என்ற பதிவெண் கொண்ட பிக்கப் வேன் சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வதைக் கண்ட போலீசார் அதை நிறுத்தி சோதனையிட்டபோது, 30 கிலோ எடையுள்ள 44 மூட்டைகளில் 1,320 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கியூ பிரிவு போலீசார் விசாரித்ததில், இந்த பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி காமராஜ் நகரை சேர்ந்த ராமர் மகன் லாரி டிரைவர் சூர்யகுமாரை கைது செய்துனர்.பின்னர், வாகனத்தில் இருந்த 1.3 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?