பைக்கில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு
சிவகாசி புதுத்தெருவில் தீபாவளி தினத்தன்று பைக்கில் பட்டாசு கொண்டு சென்ற போது அருகில் உள்ளவர்கள் வெடித்த பட்டாசு தீப்பொறி பைக்கில் வைத்திருந்த பட்டாசுகளில் பட்டு அவை வெடித்து சிதறியது. இதில் பைக்கில் சென்ற காளிராஜன் (52) பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?