அரசு பேருந்து மோதி மளிகை கடை உரிமையாளர் பலி

திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (30) இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் மொத்தமாக மளிகை பொருட்களை வாங்க வெங்களாபுரம் பகுதியில் இருந்து கசிநாயக்கன்பட்டி வரை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூரிலிருந்து பயனிகளை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.அப்போது, கசிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் எதிரே வந்த ரவிக்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மளிகை பொருட்கள் வாங்க சென்ற வாலிபர் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






