தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி முதியவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்துர் லட்சுமணன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). விவசாயியான இவர் வழக்கம்போல் முக்கரம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பால் ஊற்றும் நிலையத்தில் நேற்று மாலை பால் உற்றிவிட்டு வீடு திரும்பும் வந்துள்ளார்.அப்போது, முக்கரம்பட்டி ரயில் பாதையை கடக்க முற்படும்போது ஓமலூர் முதல் சென்னை வரை செல்லும் கூட்ஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரயில் ஓட்டுநர் குன்னத்தூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இன்று காலை திருப்பத்தூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?